Posts

Showing posts from November, 2020

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை   --------------------------------   உணர்வுகளின்  ஒருங்கிணைந்த உச்சம் காதல்....  விழிகள்  பேசிக்கொள்ளும் விசித்திர மொழி காதல்.....  தொலைவில் உள்ளவனின் அசைவுகளை இங்கு மனதில் மையப்படுத்தி கொள்வது காதல்.....  புன்னகைக்கும் இதழ் அசைவுகளில் புரிதல் கொள்வது காதல்....  சாதியால் சாவதும் காதல்.....  சாதியைச்  சாகடிப்பது காதல் ...... மதங்களை மறக்கச் செய்வதும் காதல்.....  கடல் அலைகள் விசிறி விட  வெண்ணிலாவின் மடி சாய்ந்து  நட்சத்திரங்கள் இடம் காதல் மொழி பேசி  விண்ணில் பறக்கும் உணர்வை ஏற்படுத்துவது காதல்....   கார்த்திகை திருநாளில் தீப ஒளி ஏற்றும் காதல் உள்ளங்களுக்கு இவ்வரிகள்....  உங்களில் ஒருவன்              கோவூர்     ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை ---------------------------------   மாலை நேரத்து  காற்றே....   அதிகாலை      தென்றலே....      உதயமாகும்  உதயசூாியனே....  மேக கூட்டமே... பனிபொழிவே....    உச்சி வெயிலே... இதமான மாலை             நேரத்து   சூாியனே... பௌா்ணமி நிலவே    இன்ப ஒளியே... இயற்க்கையே    அமாவாசை இரவே.... வளா்பிறையே      முழு நிலவே.... வங்க கடலே....    வசந்தம் வீசும்  இயற்க்கை தந்த     வானளாவிய   மரங்களே.....     மனம் வீசும்  மல்லிகை    தோட்டங்களே.... வன விலங்குகளே...    வான் பறவைகளே... கனிகளே....    கீரை வகைகளே காய்கறிகளே....    இயற்க்கை அன்னையே   உம்மை போற்றி.... உங்களில் ஒருவன்            கோவூா்      ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை  ---------------------------------    பூங்காற்றே நீ தென்றலாய்  வீசும் போது  ரசிக்கும்  உள்ளங்கள் தான்  நீ சூறாவளியாய் மாறும்போது பயந்துதான் போகிறது  இந்த உள்ளங்கள்   ஆழ் கடலில் தோன்றி அசைந்தாடும்   அலைகள் இடம்    காதல் மொழி பேசி கரையை கடக்கும் புயல்  காற்றே....  ஏழையின் குடிசை மட்டும் பிரித்து எடுத்து செல்லும் கல் நெஞ்சம் கொண்ட காற்றே.....  குறுக்கு வழியில் சம்பாதித்து   கோடி கோடியாய் குவித்து வைத்திருக்கும்  கோமான்கள் இல்லங்கள் புகுந்து....  கரன்சி நோட்டுகளை உன் காற்று என்ற கரங்களால் அள்ளிவந்து ஏழைகளின் இல்லங்களில் வீசி விட்டுப் போக  உனக்கு மனமில்லையா.....  புயல்  காற்றே நீயும் ஒரு கோழை தான்  பணக்காரனின் மாளிகைக்குச் சென்றாள் உன்னால் திரும்ப முடியாது  ஏழை நடுத்தர மக்களின் இல்லங்களில் சென்றாள்  நீ வீரனாக சென்றுவிடலாம்  நீ வீரன் என்ற அடையாளத்தை ஏழைகள்தான்  கொடுக்கிறார்கள் சூறாவளி புயல் காற்றே  நிவர்  புயல் கரையைக் கடந்தாலும்...

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை -----------------------------------          என்னவளின்  மச்சம் தீண்ட வருவாயா      வான் மழையே... வைகை நதியில்     அசைந்தாடும்  வான் நிலவே.....      பொய்கை எனும்  பூஞ்சோலையில்      பூத்துக்குலுங்கும்  மலர்களில் ஒன்று       மழலையின்  சிரிப்பைக் கண்டு        மலரத்தான்   துடிக்கிறதோ...      உணவுக்கு  பஞ்சம் என வாழ்கின்ற       வாழ்வில் வசந்தம்  தேடும் உள்ளம் தான்...     பசித்தவனுக்கு  தன் உணவை பகிர்ந்து      கொடுக்கிறது....  நீதிமான்கள் வாழ்ந்த      நாட்டில் தான்   நீதி தேவதை கண்மூடி       நிற்கிறது...  உங்களில் ஒருவன்            கோவூர்       ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை  ---------------------------------   நினைவுகள் நிதானம் கொள்ளும்போதுதான்  உரிமைகளின் உணர்வுகள் புரிகிறது  புரிதல் உச்சம் அடையும் போது தான்  புன்னகை நிதர்சனம் ஆகிறது  நிதர்சனம் நிலை கொள்ளும்போதுதான்  நமது நிலை என்னவென்று உணர தோன்றுகிறது   உங்களில் ஒருவன்              கோவூர்        ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை  --------------------------------   நேற்று போல் இன்று இல்லை   இன்றுபோல் நாளை இருக்குமா தெரியாது  வாழ்க்கை என்னும் தோணியில் நம்பிக்கை என்னும் துடுப்பு இல்லாவிடில் நமக்கு விடியல் இல்லாமல் போய்விடும் மனக்கஷ்டம் உடல் கஷ்டம்  பணக்கஷ்டம் வரும்போதெல்லாம்  நம்பிக்கையை மட்டும் தளரவிடாமல்  பயணித்தால் வாழ்க்கை சிறக்கும்  புண்பட்ட இதயத்திற்கு பிடித்தவர்கள் விஷத்தை கொடுத்தால்கூட அது மருந்தாகத்தான் மாறும்  உங்களில் ஒருவன்             கோவூர்        ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை   --------------------------------   வலி என்னவோ உடலுக்கு    மருந்து என்னவோ மனதுக்கு  ஓடுகின்ற கண்ணீரில் காகிதத்தில் கப்பல் விட்டேன்  கண்ணீரில் கப்பலா ஆம்  கருப்புப்பணம் ஒழிப்பு என்ற பெயரில்  ஏழைகள் வைத்திருந்த பணம் செல்லாது என்ற சட்டத்தின் தான் ஓடியது கண்ணீர்  ஆறு  செல்லாது என்று அறிவித்த ஆயிரம் ரூபாய் 500 ரூபாய் நோட்டுக்களில் கப்பல் விட்டேன்  ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதில் 500  ரூபாய் வெளியிட்டிருந்தால்  எங்கள் பிரதமர் வெள்ளை மாளிகையில் வெண்புறா  என்று மகிழ்ந்திருப்பேன்  ஆயிரம் ரூபாய்க்கு பதில் 2000 ரூபாய் வெளியீடு வெளியிட்டு  களவாணி களுக்கெல்லாம்  களவாணிழை தேர்ந்தெடுத்ததை நினைத்து மனம் வருந்துகிறேன்         உங்களில் ஒருவன்             கோவூர்         ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை -----------------------------------  நன்றி கெட்ட மனிதர்கள் வாழும் நாட்டில் நீதி நாயம் கிடைக்குமோ....  நீட்  தேர்வை  வென்ற பின்பும் கல்லூரியில் உள்ள பணப் தேர்வை வெல்ல முடியாமல்   தத்தளிக்குது பெற்றோர்களின் மனம்  பணத்தை கொடுத்தால் சீட்டு அதுக்கு எதுக்கு நீட்டு படிக்காதவன் பகுத்தறிவு பேசுகிறான்  ஓட்டுப்போடும் இயந்திர இடத்தில் பாமரன் தன் மனக்குமுறலை கொட்டுகிறான்  ஓட்டுப் போடும் இயந்திரமோ தன் முதலாளி சொல்வதை மட்டும் தான் கேட்கிறது  நீதி நியாயம் என்ன விலை  உங்களில் ஒருவன்            கோவூர்       ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை    --------------------------------  வேலையில்லாமல் திண்டாடும் இளைய சமூகமே  இருக்கும் வேலையை விட்டுவிட்டு ஊர் சுற்றும் மனங்களே  படித்தவனுக்கு வேலை இல்லை  பசித்தவனுக்கு சோறு இல்லை  மணம் முடிக்க வரம் தேடி அலைகிறது ஒரு கூட்டம்  நல்லவர்கல் போல வேஷம் போட்டு சுற்றுவது ஒரு கூட்டம்  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பொழுதுபோக்குகளில் சில கூட்டம்  மறதி மட்டுமே தமிழர்களின் சொத்து  ஏமாற்றம் அரசியல்வாதிகள் எப்போதுமே கெத்து  உங்களில் ஒருவன்          கோவூர்      ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை   --------------------------------  மேற்கே ஒரு மின்னல்  என்னவளுக்கோ தும்பல்  ஏற்றுமதியில் முதல் இடம் சன்னல்  பல்லாவரம் பக்கத்தில் இருப்பது பம்மல்  கொரோனா அறிகுறி இரும்பல்  காதுக்கு அழகு கம்மல்  கட்டிடத்திற்கு தேவை செங்கல்  பணம் மரத்தில் இறக்குவது கல்  போதையனால் மாறும் சொல்  புன்னகைக்கு அழகு பல்     உங்களில் ஒருவன்              கோவூர்         ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை  ---------------------------------  அதிகாலை காற்றும்   ஆர்ப்பரிக்கும் மனமும்  மாலை  நேரத்து  சிவந்த வானமும்      மஞ்சள் குங்குமமும்        தழுவிய சூரியனும்  மேகக் கூட்டமும்    மெல்லிய தூறலும் பனிப்பொழிவும்      பௌர்ணமி நிலவும் வங்கக் கடலும்    வலையில் சிக்கிய        வாளை மீனும் பட்டப் படிப்பும்    வேலையின்மையும்  விலை நிலம்   வீடு வாசல் விற்பனையும்     மருத்துவ கவுன்சிலும்         உங்களில் ஒருவன்               கோவூர்          ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை   ----------------------------------  மனம் அமைதி இன்மையும்   உடல் சோர்வும்  உடன் பிறந்தவர்களே   புரிந்து கொள்ளாத போது  பழகியவர்கள்   மட்டும் என்ன விதிவிலக்கா  பாசம் கூட இங்கு    வேஷமாய்   கவலையின் மருந்து   கண்ணீர் என்றால்  கண்ணீரின்   வலி யாரறிவாரோ  மழைக்கு தெரியுமோ   பூமியின் தாகம்  கடவுளே உனக்கு   தெரியாதா எனது சோகம்  மோகம் கொண்டு   அலையும் உலகில்  கடவுள் இருப்பது   உண்மையா...  உங்களில் ஒருவன்             கோவூர்               ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை   --------------------------------  பருவ நினைவுக்கு தெரியுமா  பகலிலும் நம்மை ரசிப்பார்கள் என்று...  படித்தவனின் பாதை பல்லாக்கில் பயணிப்பது போல  படிக்காதவனின் பாதை பள்ளம் மேடு அறியாது  பாசம் வைத்தவன் பைத்தியக்காரன்  பாசாங்கு செய்பவன்   பாராட்டப்படுகிறான்  பனித்துளியும் உன் மேனி படரும்  பசுமை புள்ளே  உங்களில் ஒருவன்            கோவூர்        ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை -----------------------------------  அவள் என்னைத் தேட வில்லை  என் முகம் காணாமல் அவள் விழிகள்  ஏங்கவில்லை  மனம் நிறைய அவள் முகம்  என்  மதி எங்கும் அவள் நினைவுகள்  என் விழிகள் பூத்துத்தான்  போகும் அவள் வரும் பாதையை பார்த்து  காதலில் மட்டுமில்லை ஒருதலைக்காதல்  சில உண்மையான உள்ளங்கள்  பாசத்தை வைத்து பரிதவித்துக் கொண்டுதான் இருக்கின்றன  ஏக்கங்கள் நிறைந்த வாழ்வில்   ஏமாற்றும் எப்படி விலகிப் போகும்  வற்றிய விழிகளோடு அலைபேசியில்  நேசிக்கும் முகத்தை வருடி கொண்டு     வான் மழை துளியில் காகித  கப்பலில் ஒரு பயணம்  உங்களில் ஒருவன்             கோவூர்         ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை  --------------------------------  பனிப்பொழியும்   பருவ  மாற்றமும்  பசுமை தழைக்க கூடும்   கார்மேக கூட்டம்  பாவையவள் விழிகளில்   ஏனோ காதல் சோகம்  பருவ மங்கைகளுக்கு   பாதுகாப்பு இல்லாத என் தேசம்  பகுத்தறிவு கொள்கைகளை   எதிர்த்து  போடுகிறார்கள் கோசம்  பாரத தேசத்தை ஆளுகிறவர்கள்    போடுகிறார்கள் வேஷம்  உங்களில் ஒருவன்             கோவூர்        ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை ---------------------------------    மலரே .... மண்ணில் உன்     தேகம் படுகையிலே...  உடலும் சிலிர்த்துதான்  போகிறது....    மலரே முதன் முறையாக  உன்னை      வாங்கினேன் ... என்னவளின் கூந்தலில்    சூடி மகிழ்ந்தேனே... எங்கள் மண கோலத்தில்     மாலையாக எங்களை  அலங்காித்த அழகு      மலரே.... என் மகளின் ஆசைக்காய்    ரோஜா செடியாய் உன்னை  என் இல்லத்தில் நட்டு  நீ வளா்ந்த போது      என் மகள் மகிழ்ந்தாளே....    பூத்த முதல் ரோஜாவை  கடவுளுக்கு     அற்ப்பனிக்க குருக்கள் ஒரு மல்லிகை     பூவை எங்களுக்கு  கொடுத்தாரே....    ஏன் இன்று எனக்கு  எத்தனை போ் மலா்       மாலையிட்டாா்கள்     மலா் மனமே ....  என் இறுதி ஊர்வலத்தில்  நீ மிதிபடுகையில்       என் மனம் வலிக்கத்தான்      செய்கிறது.....    மலர்களே கருதரிப்பு...

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை  --------------------------------  மௌனமே  என்னை மெய்மறக்க செய்த  என் மெய்யே.....  துனையாய் வந்த  என் தொடா் கதையே.....  என் கதையை காக்க வந்த  காவியமே....    உன் விழிபாா்வையில்    என் உள்ளம் அறியும் உணா்வில்    கலந்த  உயிரே.....   என் முகபாவனையை வைத்து எனக்கு      எங்கே வலிக்கிறது என     கண்டுகொள்ளும் என் மனம் அறிந்த  மருத்துவமே.....   நான் கோபப்படும் போது  என்னை கட்டி அனைத்து  உதட்டோடு உதடாய் சாந்த படுத்தும்   பவியே.....  வீட்டில் தோழியாய் வெளியில் செல்லும் போது மனைவியாய்...  கட்டிலில் காதலியாய் ...  என் உடல் தளறும் போது தயாய் ... என் மனம் மாற மதுமையே... என் வாழ்வின் புதுமையே..... உன்மை தான். ...    மனைவி அமைவதெல்லாம்     இறைவன் கொடுத்த வரம் தான்...    ஆனால்   இவ்வரம் கிடைத்தவா்       சிலா்..  ஏங்கியவா்கள்        பலா்...     உ...

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை   -------------------------------  கனவு   காயங்களின் காட்சி  கண்ணீர்   வலிகளின்  காட்சி  அம்மா  பாசத்தின் காட்சி  அப்பா  அன்பின் காட்சி  அக்கா  அம்மாவின் மறு காட்சி  தங்கை   கண்டிப்பின் காட்சி  அண்ணன்   அக்கறையின் காட்சி  தம்பி   தவறுகளை திருத்தம் காட்சி   மனைவி குடும்பத்தின் காட்சி     குழந்தை    வம்சத்தின் காட்சி  உங்களில் ஒருவன்            கோவூர்       ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை   --------------------------------  பிடிக்காத விஷயங்களை செய்யும் போது பின்விளைவுகள் இருக்கத்தான் செய்யும்  பாவத்தின் சம்பளம் பணம் பதவி  நன்மையும் சம்பளம் நோய் நொடி மரணம்  அறிமுகம் இல்லாதவரிடம் தவறை கூட மன்னித்து விடலாம்  அறிந்தவர்கள் இடத்திலே செய்யும் தவறு மன்னிக்க முடியாதது  செய்யும் தவறுகளை முடிந்த அளவிற்கு திருத்திக் கொள்வதே சிறந்தது  மனம் வருந்தி என்ன பயன் மாற்றம் எதில் வர வேண்டுமோ அதில் வரவேண்டும்   வாழ்க்கை தீப்பெட்டியில் இருக்கும் கடைசி தீக்குச்சி போல  உங்களில் ஒருவன்             கோவூர்         ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை ---------------------------------     கடல் போல்  பிரச்சினைகள்    இருந்தாலும்... மனதிற்க்கு       பிடித்தவா்கள்  கடுகு போல சிறு        புண்ணகைத்தாலும்  நம் மனம் குழந்தை போல     மகிழத்தான் செய்கிறது.... இங்கு எதுவும்      நிரந்தரம் இல்லை.. நிலையில்லா வாழ்வில்      ஏன் இத்தனை தொல்லை....  காலங்கள் மாறும்        காட்சிகள் மாறும்...  பலா் வாழ்வில்        கனவுகள் ஏனோ  மாறவில்லையே...     கடவுள் மீது பழி    போடுவது வீன்        இங்கு சமுக கட்டமைப்பு   பொருளாதார பகிா்ந்தளிப்பு        மறு சீரமைக்க  படவேண்டும் .  உங்களில் ஒருவன்            கோவூா்         ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை   ---------------------------------    நேசிப்பு  உண்மையானால்    நிம்மதி  நிஜமாகும்....    நெருக்கம்  அதிகமானால்      எதிா் மறை  விலகி போகும் ....   புாிந்த உறவில் புண்ணகை     நிஜம் தான்... நல்லவனுக்கு      மட்டுமே இடையூறு     அதிகம் தான்.... கலைந்து செல்லும்      மேகம் கூட  கருனையாய்          மழையை      மண்ணிற்க்கு  தருகிறது....     இறுக்கமான  மனங்களே....    கொஞ்சம்   மகிழ்ச்சியை தாருங்கள்...   வைரஸ்  வலம் வரும்போது ....  வறுமையில் வாடும்  உள்ளங்களுக்கு  உதவுங்கள்   நல் உள்ளங்களே...   உங்களில் ஒருவன்            கோவூா்          ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை  --------------------------------  மௌனமே  என்னை மெய்மறக்க செய்த  என் மெய்யே.....  துனையாய் வந்த  என் தொடா் கதையே.....  என் கதையை காக்க வந்த  காவியமே....    உன் விழிபாா்வையில்    என் உள்ளம் அறியும் உணா்வில்    கலந்த  உயிரே.....   என் முகபாவனையை வைத்து எனக்கு      எங்கே வலிக்கிறது என     கண்டுகொள்ளும் என் மனம் அறிந்த  மருத்துவமே.....   நான் கோபப்படும் போது  என்னை கட்டி அனைத்து  உதட்டோடு உதடாய் சாந்த படுத்தும்   பவியே.....  வீட்டில் தோழியாய் வெளியில் செல்லும் போது மனைவியாய்...  கட்டிலில் காதலியாய் ...  என் உடல் தளறும் போது தயாய் ... என் மனம் மாற மதுமையே... என் வாழ்வின் புதுமையே..... உன்மை தான். ...    மனைவி அமைவதெல்லாம்     இறைவன் கொடுத்த வரம் தான்...    ஆனால்   இவ்வரம் கிடைத்தவா்       சிலா்..  ஏங்கியவா்கள்        பலா்...     உ...

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை ---------------------------------    மலரே .... மண்ணில் உன்     தேகம் படுகையிலே...  உடலும் சிலிர்த்துதான்  போகிறது....    மலரே முதன் முறையாக  உன்னை      வாங்கினேன் ... என்னவளின் கூந்தலில்    சூடி மகிழ்ந்தேனே... எங்கள் மண கோலத்தில்     மாலையாக எங்களை  அலங்காித்த அழகு      மலரே.... என் மகளின் ஆசைக்காய்    ரோஜா செடியாய் உன்னை  என் இல்லத்தில் நட்டு  நீ வளா்ந்த போது      என் மகள் மகிழ்ந்தாளே....    பூத்த முதல் ரோஜாவை  கடவுளுக்கு     அற்ப்பனிக்க குருக்கள் ஒரு மல்லிகை     பூவை எங்களுக்கு  கொடுத்தாரே....    ஏன் இன்று எனக்கு  எத்தனை போ் மலா்       மாலையிட்டாா்கள்     மலா் மனமே ....  என் இறுதி ஊர்வலத்தில்  நீ மிதிபடுகையில்       என் மனம் வலிக்கத்தான்      செய்கிறது.....    மலர்களே கருதரிப்பு...