இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
--------------------------------
உணர்வுகளின்
ஒருங்கிணைந்த உச்சம் காதல்....
விழிகள்
பேசிக்கொள்ளும் விசித்திர மொழி காதல்.....
தொலைவில் உள்ளவனின் அசைவுகளை இங்கு மனதில் மையப்படுத்தி கொள்வது காதல்.....
புன்னகைக்கும் இதழ் அசைவுகளில் புரிதல் கொள்வது காதல்....
சாதியால் சாவதும் காதல்.....
சாதியைச் சாகடிப்பது காதல் ......
மதங்களை மறக்கச் செய்வதும் காதல்.....
கடல் அலைகள் விசிறி விட
வெண்ணிலாவின் மடி சாய்ந்து
நட்சத்திரங்கள் இடம் காதல் மொழி பேசி
விண்ணில் பறக்கும் உணர்வை ஏற்படுத்துவது காதல்....
கார்த்திகை திருநாளில் தீப ஒளி ஏற்றும் காதல் உள்ளங்களுக்கு இவ்வரிகள்....
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment