இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
---------------------------------
மலரே ....
மண்ணில் உன்
தேகம் படுகையிலே...
உடலும் சிலிர்த்துதான்
போகிறது....
மலரே முதன் முறையாக
உன்னை
வாங்கினேன் ...
என்னவளின் கூந்தலில்
சூடி மகிழ்ந்தேனே...
எங்கள் மண கோலத்தில்
மாலையாக எங்களை
அலங்காித்த அழகு
மலரே....
என் மகளின் ஆசைக்காய்
ரோஜா செடியாய் உன்னை
என் இல்லத்தில் நட்டு
நீ வளா்ந்த போது
என் மகள் மகிழ்ந்தாளே....
பூத்த முதல் ரோஜாவை
கடவுளுக்கு
அற்ப்பனிக்க
குருக்கள் ஒரு மல்லிகை
பூவை எங்களுக்கு
கொடுத்தாரே....
ஏன் இன்று எனக்கு
எத்தனை போ் மலா்
மாலையிட்டாா்கள்
மலா் மனமே ....
என் இறுதி ஊர்வலத்தில்
நீ மிதிபடுகையில்
என் மனம் வலிக்கத்தான்
செய்கிறது.....
மலர்களே
கருதரிப்பு முதல்
கல்லரை வரை
நீா் இன்றி இங்கு
எதுவுமே சாத்தியமில்லை....
மலா்களை வளா்ப்போம் ...
மண்வளம்
மண்வாசம் காப்போம்..
உங்களில் ஒருவன்
கோவூா்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment