இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை
 ---------------------------------
   பூங்காற்றே நீ தென்றலாய் 
வீசும் போது 
ரசிக்கும்  உள்ளங்கள் தான்

 நீ சூறாவளியாய் மாறும்போது பயந்துதான் போகிறது  இந்த உள்ளங்கள்

  ஆழ் கடலில் தோன்றி அசைந்தாடும்   அலைகள் இடம்
  
காதல் மொழி பேசி கரையை கடக்கும் புயல்  காற்றே....

 ஏழையின் குடிசை மட்டும் பிரித்து எடுத்து செல்லும் கல் நெஞ்சம் கொண்ட காற்றே.....

 குறுக்கு வழியில் சம்பாதித்து
  கோடி கோடியாய் குவித்து வைத்திருக்கும்  கோமான்கள் இல்லங்கள் புகுந்து....

 கரன்சி நோட்டுகளை உன் காற்று என்ற கரங்களால் அள்ளிவந்து ஏழைகளின் இல்லங்களில் வீசி விட்டுப் போக  உனக்கு மனமில்லையா.....

 புயல்  காற்றே நீயும் ஒரு கோழை தான்

 பணக்காரனின் மாளிகைக்குச் சென்றாள் உன்னால் திரும்ப முடியாது

 ஏழை நடுத்தர மக்களின் இல்லங்களில் சென்றாள்  நீ வீரனாக சென்றுவிடலாம்

 நீ வீரன் என்ற அடையாளத்தை ஏழைகள்தான்  கொடுக்கிறார்கள் சூறாவளி புயல் காற்றே

 நிவர்  புயல் கரையைக் கடந்தாலும் 

நிர்வாண  நிதி மட்டும் மக்களை  கடக்காது

 உங்களில் ஒருவன் 
           கோவூர் 
    ம சுந்தரேசன்

Comments

Popular posts from this blog

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதைகள்