Posts

Showing posts from October, 2020

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை  --------------------------------  பனிப்பொழியும்   பருவ  மாற்றமும்  பசுமை தழைக்க கூடும்   கார்மேக கூட்டம்  பாவையவள் விழிகளில்   ஏனோ காதல் சோகம்  பருவ மங்கைகளுக்கு   பாதுகாப்பு இல்லாத என் தேசம்  பகுத்தறிவு கொள்கைகளை   எதிர்த்து  போடுகிறார்கள் கோசம்  பாரத தேசத்தை ஆளுகிறவர்கள்    போடுகிறார்கள் வேஷம்  உங்களில் ஒருவன்             கோவூர்        ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை   --------------------------------  பருவ நினைவுக்கு தெரியுமா  பகலிலும் நம்மை ரசிப்பார்கள் என்று...  படித்தவனின் பாதை பல்லாக்கில் பயணிப்பது போல  படிக்காதவனின் பாதை பள்ளம் மேடு அறியாது  பாசம் வைத்தவன் பைத்தியக்காரன்  பாசாங்கு செய்பவன்   பாராட்டப்படுகிறான்  பனித்துளியும் உன் மேனி படரும்  பசுமை புள்ளே  உங்களில் ஒருவன்            கோவூர்        ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை -----------------------------------  அவள் என்னைத் தேட வில்லை  என் முகம் காணாமல் அவள் விழிகள்  ஏங்கவில்லை  மனம் நிறைய அவள் முகம்  என்  மதி எங்கும் அவள் நினைவுகள்  என் விழிகள் பூத்துத்தான்  போகும் அவள் வரும் பாதையை பார்த்து  காதலில் மட்டுமில்லை ஒருதலைக்காதல்  சில உண்மையான உள்ளங்கள்  பாசத்தை வைத்து பரிதவித்துக் கொண்டுதான் இருக்கின்றன  ஏக்கங்கள் நிறைந்த வாழ்வில்   ஏமாற்றும் எப்படி விலகிப் போகும்  வற்றிய விழிகளோடு அலைபேசியில்  நேசிக்கும் முகத்தை வருடி கொண்டு     வான் மழை துளியில் காகித  கப்பலில் ஒரு பயணம்  உங்களில் ஒருவன்             கோவூர்         ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை -----------------------------------  உறவுமுறையில்   உரிமைமீறல்  உண்மை மனமே   ஊடலில் சிக்கினால்  உரிமை மனம்  ஊமையாய் போகுமோ  ஊடகத்தில் வந்தது கொஞ்சம்   உலகம் அறியாதது அதிகம்  உணர்வுகளை   உதாசீனம் படுத்தினாள்  உள் குமுறும் உண்மை மனம்  ஊசி இடம் கொடுத்தால் தான்    உடைத் தைக்கும் நூல்  உள்நுழையும்  உங்களில் ஒருவன்            கோவூர்       ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை   --------------------------------  மேற்கே ஒரு மின்னல்  என்னவளுக்கோ தும்பல்  ஏற்றுமதியில் முதல் இடம் சன்னல்  பல்லாவரம் பக்கத்தில் இருப்பது பம்மல்  கொரோனா அறிகுறி இரும்பல்  காதுக்கு அழகு கம்மல்  கட்டிடத்திற்கு தேவை செங்கல்  பணம் மரத்தில் இறக்குவது கல்  போதையனால் மாறும் சொல்  புன்னகைக்கு அழகு பல்     உங்களில் ஒருவன்              கோவூர்         ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை   --------------------------------  சிலுவையும் சித்திரா   பௌர்ணமியும்  திருச்செந்தூர் முருகனும்     தீர்க்கதரிசனமும்  ஹஜ் யாத்திரையும்   ஆடிப்பெருக்கும்   மதங்கள் மாறுபட்ட போதும்    மனங்களால் ஒன்றிணைந்த    நாடு எங்கள் நாடு  அல்லேலூயா   அரோகரா   அல்லா  மதத்தின் பெயரில்   மக்களைப் பிரித்து அரசியல்    ஆதாயம் தேடுபவர்களை  ஒருபோதும் ஆதரிக்காது    எங்கள் தமிழ்நாடு    உங்களில் ஒருவன்                கோவூர்         ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை  ---------------------------------  அதிகாலை காற்றும்   ஆர்ப்பரிக்கும் மனமும்  மாலை  நேரத்து  சிவந்த வானமும்      மஞ்சள் குங்குமமும்        தழுவிய சூரியனும்  மேகக் கூட்டமும்    மெல்லிய தூறலும் பனிப்பொழிவும்      பௌர்ணமி நிலவும் வங்கக் கடலும்    வலையில் சிக்கிய        வாளை மீனும் பட்டப் படிப்பும்    வேலையின்மையும்  விலை நிலம்   வீடு வாசல் விற்பனையும்     மருத்துவ கவுன்சிலும்         உங்களில் ஒருவன்               கோவூர்          ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை   ----------------------------------  மனம் அமைதி இன்மையும்   உடல் சோர்வும்  உடன் பிறந்தவர்களே   புரிந்து கொள்ளாத போது  பழகியவர்கள்   மட்டும் என்ன விதிவிலக்கா  பாசம் கூட இங்கு    வேஷமாய்   கவலையின் மருந்து   கண்ணீர் என்றால்  கண்ணீரின்   வலி யாரறிவாரோ  மழைக்கு தெரியுமோ   பூமியின் தாகம்  கடவுளே உனக்கு   தெரியாதா எனது சோகம்  மோகம் கொண்டு   அலையும் உலகில்  கடவுள் இருப்பது   உண்மையா...  உங்களில் ஒருவன்             கோவூர்               ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை -----------------------------------    வலிகள் இங்கு பழகியது என்றாலும் வேதனை என்னவோ புதிதாய்...  யாருக்காக இந்த வாழ்க்கை  புரியாத பயணமாய் ... புன்னகை என்னவோ எதிரியாய்  புரியாத வலிகள் என்னவோ நட்பாய்... கவலையின் தாகம் தண்ணீர் என்றால் மனதின் பாரம் யார்  அறிவாரோ .... வலித்த மனது வலிகள் மறக்க  யார் மருந்தோ .... நித்தம் நித்தம்  வலிகளும் வேதனைகளும் பின் தொடர்ந்தாள்  நிம்மதியின்  பாதை யார் அறிவாரோ...      உங்களில் ஒருவன்               கோவூர்          ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை ----------------------------------   தென்றல் வந்து தீண்டும் போது   உள்ளம் என்னவோ உன்னை  நினைக்க  தோன்றுது......  அந்த நீரோடையில் நித்தமும்  நினைந்து மகிழ்ந்த காலம் அது.....  கனவே உன் நினைவில் என் வாழ்க்கை  வாடுதம்மா....  உன் புன்னகை காணும்போதெல்லாம் நான் புதியவனாய் .... உன் நடை அழகை காணும் போதெல்லாம் நான் மழலையாய்.....  மல்லிகை மனமே முல்லை அழகே....    உங்களில் ஒருவன்             கோவூர்        ம சுந்தரேசன்