இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
-----------------------------------
வலிகள் இங்கு பழகியது என்றாலும் வேதனை என்னவோ புதிதாய்...
யாருக்காக இந்த வாழ்க்கை
புரியாத பயணமாய் ...
புன்னகை என்னவோ எதிரியாய்
புரியாத வலிகள் என்னவோ நட்பாய்...
கவலையின் தாகம் தண்ணீர் என்றால் மனதின் பாரம் யார் அறிவாரோ ....
வலித்த மனது வலிகள் மறக்க
யார் மருந்தோ ....
நித்தம் நித்தம்
வலிகளும் வேதனைகளும் பின் தொடர்ந்தாள்
நிம்மதியின் பாதை யார் அறிவாரோ...
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment