இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
-----------------------------------
அவள் என்னைத் தேட வில்லை
என் முகம் காணாமல் அவள் விழிகள் ஏங்கவில்லை
மனம் நிறைய அவள் முகம்
என் மதி எங்கும் அவள் நினைவுகள்
என் விழிகள் பூத்துத்தான் போகும் அவள் வரும் பாதையை பார்த்து
காதலில் மட்டுமில்லை ஒருதலைக்காதல்
சில உண்மையான உள்ளங்கள்
பாசத்தை வைத்து பரிதவித்துக் கொண்டுதான் இருக்கின்றன
ஏக்கங்கள் நிறைந்த வாழ்வில்
ஏமாற்றும் எப்படி விலகிப் போகும்
வற்றிய விழிகளோடு அலைபேசியில் நேசிக்கும் முகத்தை வருடி கொண்டு
வான் மழை துளியில் காகித
கப்பலில் ஒரு பயணம்
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment