Posts

Showing posts from December, 2020

இன்று ஒரு கவிதைகள்

Image
இன்று ஒரு கவிதை ____________________ ‌‌   வருத்தத்திலும் வறுமையிலும்  வாழும் உள்ளம் பல கோடி உண்டு  கோடிகளில் புரளும் உள்ளம்   ஒரு சில உண்டு... மழை என்றாலும் கொடிய நோய் என்றாலும்  நிலநடுக்கம் என்றாலும்  வன்முறை சம்பவங்கள் என்றாலும்  கற்பழிப்பு என்றாலும்  முதலில் பாதிப்பது வறுமையில் இருப்பவன் மட்டுமே....  அரசாங்கத்தை நிர்ணயிப்பதும் ஏழைதான்  அரசு கஜானாவை நிரப்புவதும் ஏழைதான்...  பணக்காரனை பணக்காரனாக வாழ வைப்பதும் ஏழைதான்....  ஒருவனுடைய வறுமையை தன்னுடைய ஆளுமை ஆக்கிக் கொள்ளும்  முதலாளித்துவமும் அரசியலமைப்பும் இருக்கும் வரை  ‌‌ வல்லரசு வெறும் கனவே ..    உங்களில் ஒருவன்              ‌‌  கோவூர்       ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

இன்று் ஒரு கவிதை -----------------------------------     சோகத்திலும்   சிரிப்பவன் உண்டு ....     சொர்க்கத்திலும்   வருந்துகிறவனம்      உண்டு .... மழையிலே .     நினைக்கிறவன்  மண்வாசனை .      உணர்கின்றான்....  மண்ணை விற்பவன்    பணம்  வாசனை   உணர்கின்றான்.....      வாசனை  உணர்வு   இல்லாதவனே        சன்னியாசியாய்   திரிகின்றான் ....     காலம்  என்னும் போக்கில்    காதல் மறந்து  கவிதையாய்   ஒரு பயணம் ..    உங்களில் ஒருவன்              கோவூர்        ம சுந்தரேசன்

இன்று ஒரு கவிதைகள்

Image
தங்க தளபதியெ... ஆர்த்தெழம் பேரலை நீ அடங்கா எரிமலை நீ தாகம் தணிப்பவன் நீ தவறுகள் தடுப்பவன் நீ உணர்ச்சியின் உருவம் நீ ஒழக்கத்தின் உறைவிடம் நீ அறிவை மதிப்பவன் நீ பண்பை வளர்ப்பவன் நீ   பாருக்கு உழைப்பவன் நீ உம் வழியில் நடப்போம்.. உயர் தமிழ் வளர்ப்போம்..

இன்று ஒரு கவிதைகள்

இன்று ஒரு கவிதை  ---------------------------------  என்னதான் சண்டையோ இந்த  இமைகளுக்கு  விழிகள் கூட சமரசம் செய்து பார்த்தது முடியவில்லை....  இரவெல்லாம் பிரிந்து இருந்த இமைகள்  அதிகாலை இமைகள் மூடியது .... விழிகள் உறங்கியது.....  உறங்கிய விழித்திரையில் அவள் முகம் ..... அழகிய முகம்    பன்மொழி பேசும்  பவித்திர விழிகள் ... பாசம் முகம்  வான் நிலவும் ரசிக்கும் அவள் கன்னங்கள்...  பவள பல்லழகி மூன்றாம் பிறை    இதழ் அழகி .... வானவில் கழித்தழகி....  சந்தன பொட்டழகி....  சாந்த மனம் அழகி ....  சமரசப் பேச்சு அழகி....  மேகக்கூட்ட உடை அழகி ....  அவள் மார்போடு என் முகம் அணைத்துக் கொண்டாள்  அவள் உயரம் என்பதால்....  அவள் தேக சூட்டில் நான்  மெய் மறந்தேன்  கட்டிலில் இருந்து    கீழே விழுந்தேன்....  விழித்தேன் கண்டது கனவு என உணர்ந்தேன்.....  மகிழ்ச்சி கூட பல மனிதர்களுக்கு கனவில் மட்டும் தான்...  உங்களில் ஒருவன்           கோவூர்    ...