இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
---------------------------------
என்னதான் சண்டையோ இந்த இமைகளுக்கு
விழிகள் கூட சமரசம் செய்து பார்த்தது முடியவில்லை....
இரவெல்லாம் பிரிந்து இருந்த இமைகள்
அதிகாலை இமைகள் மூடியது ....
விழிகள் உறங்கியது.....
உறங்கிய விழித்திரையில் அவள் முகம் .....
அழகிய முகம்
பன்மொழி பேசும்
பவித்திர விழிகள் ...
பாசம் முகம்
வான் நிலவும் ரசிக்கும் அவள் கன்னங்கள்...
பவள பல்லழகி மூன்றாம் பிறை
இதழ் அழகி ....
வானவில் கழித்தழகி....
சந்தன பொட்டழகி....
சாந்த மனம் அழகி ....
சமரசப் பேச்சு அழகி....
மேகக்கூட்ட உடை அழகி ....
அவள் மார்போடு என் முகம் அணைத்துக் கொண்டாள்
அவள் உயரம் என்பதால்....
அவள் தேக சூட்டில் நான் மெய் மறந்தேன்
கட்டிலில் இருந்து
கீழே விழுந்தேன்....
விழித்தேன் கண்டது கனவு
என உணர்ந்தேன்.....
மகிழ்ச்சி கூட பல மனிதர்களுக்கு கனவில் மட்டும் தான்...
உங்களில் ஒருவன்
கோவூர்
ம சுந்தரேசன்
Comments
Post a Comment