இன்று ஒரு கவிதைகள்
இன்று ஒரு கவிதை
____________________
வருத்தத்திலும் வறுமையிலும்
வாழும் உள்ளம் பல கோடி உண்டு
கோடிகளில் புரளும் உள்ளம்
ஒரு சில உண்டு...
மழை என்றாலும் கொடிய நோய் என்றாலும்
நிலநடுக்கம் என்றாலும்
வன்முறை சம்பவங்கள் என்றாலும்
கற்பழிப்பு என்றாலும்
முதலில் பாதிப்பது வறுமையில் இருப்பவன் மட்டுமே....
அரசாங்கத்தை நிர்ணயிப்பதும் ஏழைதான்
அரசு கஜானாவை நிரப்புவதும் ஏழைதான்...
பணக்காரனை பணக்காரனாக வாழ வைப்பதும் ஏழைதான்....
ஒருவனுடைய வறுமையை தன்னுடைய ஆளுமை ஆக்கிக் கொள்ளும்
முதலாளித்துவமும் அரசியலமைப்பும் இருக்கும் வரை
வல்லரசு வெறும் கனவே ..
உங்களில் ஒருவன்
கோவூர்
Comments
Post a Comment