இன்று ஒரு கவிதை ----------------------------------- என்னவளின் மச்சம் தீண்ட வருவாயா வான் மழையே... வைகை நதியில் அசைந்தாடும் வான் நிலவே..... பொய்கை எனும் பூஞ்சோலையில் பூத்துக்குலுங்கும் மலர்களில் ஒன்று மழலையின் சிரிப்பைக் கண்டு மலரத்தான் துடிக்கிறதோ... உணவுக்கு பஞ்சம் என வாழ்கின்ற வாழ்வில் வசந்தம் தேடும் உள்ளம் தான்... பசித்தவனுக்கு தன் உணவை பகிர்ந்து கொடுக்கிறது.... நீதிமான்கள் வாழ்ந்த நாட்டில் தான் நீதி தேவதை கண்மூடி நிற்கிறது... உங்களில் ஒருவன் கோவூர் ம சுந்தரேசன்
இன்று ஒரு கவிதை -------------------------------- உணர்வுகளின் ஒருங்கிணைந்த உச்சம் காதல்.... விழிகள் பேசிக்கொள்ளும் விசித்திர மொழி காதல்..... தொலைவில் உள்ளவனின் அசைவுகளை இங்கு மனதில் மையப்படுத்தி கொள்வது காதல்..... புன்னகைக்கும் இதழ் அசைவுகளில் புரிதல் கொள்வது காதல்.... சாதியால் சாவதும் காதல்..... சாதியைச் சாகடிப்பது காதல் ...... மதங்களை மறக்கச் செய்வதும் காதல்..... கடல் அலைகள் விசிறி விட வெண்ணிலாவின் மடி சாய்ந்து நட்சத்திரங்கள் இடம் காதல் மொழி பேசி விண்ணில் பறக்கும் உணர்வை ஏற்படுத்துவது காதல்.... கார்த்திகை திருநாளில் தீப ஒளி ஏற்றும் காதல் உள்ளங்களுக்கு இவ்வரிகள்.... உங்களில் ஒருவன் கோவூர் ம சுந்தரேசன்
இன்று ஒரு கவிதை --------------------------------- பூங்காற்றே நீ தென்றலாய் வீசும் போது ரசிக்கும் உள்ளங்கள் தான் நீ சூறாவளியாய் மாறும்போது பயந்துதான் போகிறது இந்த உள்ளங்கள் ஆழ் கடலில் தோன்றி அசைந்தாடும் அலைகள் இடம் காதல் மொழி பேசி கரையை கடக்கும் புயல் காற்றே.... ஏழையின் குடிசை மட்டும் பிரித்து எடுத்து செல்லும் கல் நெஞ்சம் கொண்ட காற்றே..... குறுக்கு வழியில் சம்பாதித்து கோடி கோடியாய் குவித்து வைத்திருக்கும் கோமான்கள் இல்லங்கள் புகுந்து.... கரன்சி நோட்டுகளை உன் காற்று என்ற கரங்களால் அள்ளிவந்து ஏழைகளின் இல்லங்களில் வீசி விட்டுப் போக உனக்கு மனமில்லையா..... புயல் காற்றே நீயும் ஒரு கோழை தான் பணக்காரனின் மாளிகைக்குச் சென்றாள் உன்னால் திரும்ப முடியாது ஏழை நடுத்தர மக்களின் இல்லங்களில் சென்றாள் நீ வீரனாக சென்றுவிடலாம் நீ வீரன் என்ற அடையாளத்தை ஏழைகள்தான் கொடுக்கிறார்கள் சூறாவளி புயல் காற்றே நிவர் புயல் கரையைக் கடந்தாலும்...
Comments
Post a Comment